முதல்பக்கம் ஆசிரியர் பற்றி எழுத்தாளர் இன்று
  கதை / நாவல் சிருவர் இலக்கியம் மொழிபெயர்ப்பு 1 மொழிபெயர்ப்பு 2 அறிவியல் வரலாறு அறிவியல் புனைக்கதை  
 

ஆயிஷா அன்றாட அறிவியல்

Problem to View Tamil Fonts
Click here to
Download Tamil Font-Installer

   


Mail Your Response to the author
Any Comments?

 

இரா.நடராசனின் முதல் சிறுகதை 'இரவாகி'
- 1991ல் கணையாழியில் வெளிவந்தது. இதுவரை நூற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதியுள்ளார். அனைத்தும் வழ்க்கமான கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சோதனை முயற்சிகள்...மந்திர யதார்த்தவாதத்திற்கும், யதார்த்தவாதத்திற்குமான இடைக்கோட்டில் கச்சிதமாக பயனிப்பவை.


சிறுகதை தொகுதிகள்

மிச்சமிருப்பவன்
13 கதைகள் அடங்கிய முதல் சிறுகதை தொகுதி - 1994ல் வெளிவந்தது. முழுசேரியும் கொளுத்தப்படும் நிலையில் உயிரோடு மிச்சமிருக்கும் ஒருவனின் சுயஉரையாடல் - தமிழ் சிறுகதை உலகின் புதிய விடியலை எழுதியது என்பது வரலாறு ஆகும் - காவ்யா வெளியீடு

மதி எனும் ஒரு மனிதனின் மரணம் குறித்து
தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல... பொதுவாகவே அதுவரை இலக்கியத்தில் அதிகம் பேசப்படாத விளிம்பு நிலை மாந்தர்களை பற்றிய பதிவு, யதார்த்தவாதத்திற்கும்... மிகைமாய யதார்த்தவாதத்திற்கும் இடையே வாசகனை இழுத்துச் செல்லும் புதிய யுக்தி - நேர்கோட்டிலிருந்து விலகி - கதைகளின் அமைப்பில் சோதனைகளை புகுத்திய எழுத்துப் பிரவாகம்...இலக்கிய சிந்தனை வருடாந்திர முதல் பரிசுபெற்று பின் தமிழில் ஒரு திரைப்படமாக எடுக்கப்பட்ட ரத்தத்தில் வண்ணத்தில் கதை, அதுவரை பதிவு பெறாத அரவாணிகளின் வாழ்வை நெக்குறுகி வாசிக்க வைத்த - பின் நாட்களில் மதி குறும்படமாக எடுக்கபட்ட மதி எனும் ஒரு மனிதனின் மரணம் குறித்து... குழந்தைகள் உரிமையை தமிழ்ச்சூழலில் பெரும் விவாதமாக்கிய ஆயிஷா உள்ளிட்ட 23 கதைகள் கொண்ட இரா.நடராசனின் முக்கிய சிறுகதை தொகுதி - ஸ்நேகா வெளியீடு

ரோஸ் மற்றும் - நெடுங்கதைகள்
ஒரு உரை ஓவியமும் நான்கு நெடுங்கதைகளும் கொண்ட சிறப்பு தொகுதி, இரா.நடராசனின் அறிவியல் புனைகதைகளுக்கான தொடக்கத்தை தாங்கிய தொகுதி - காவ்யா வெளியீடு

ஒரு தூயமொழியின் துயரக்குழந்தைகள்
தமிழ் ஆசிரியர்களின் அவல வாழ்வையும், ஆங்கில மோகத்தால் சீரழியும் தூயமொழியின் துயரக்கதையை தனக்கே உண்டான அங்கத சுவைபட படைக்கிறார் நடராசன். அதை தவிர விஞ்ஞான கிறுக்கன் கதை, மகாத்மாவின் குழந்தைகள் உட்பட பல சோதனைக்கதைகள் தாங்கிய...ஆசிரியரின் நாங்காம் கதை தொகுதி - ஸ்நேகா வெளியீடு (நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது)


சில சிறப்பு தகவல்கள்

தமிழகத்தின் 'O HENRY' விருதான

- இலக்கிய சிந்தனை விருது, லில்லி தெய்வசிகாமணி விருது ஆகியவற்றை வென்ற கதைகள்.

- மதி, ஆயிஷா, ரத்தத்தின் வண்ணத்தில் ஆகிய கதைகள் குறும்படங்களாக எடுக்கப்பட்டன.

- மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு, மொழிகளில் மொத்தம் ஆறு கதைகள் மொழி பெயர்ப்பாகி உள்ளன.

- இதுவரை பலர் இக்கதைகளின் வழியே எம்ஃபில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.


நாவல்

பாலித்தீன் பைகள்

- தமிழ் நாவல் கட்டமைப்பில் பாலிதீன் பைகள் ஒரு புதிய உத்தியை அறிமுகம் செய்தது. இது ஒரு நேர்கோட்டுக்கதை அல்ல.

- தங்கள் கதையை கதை மாந்தர்களே வாசகர்களோடு சேர்ந்து படிக்கும் உத்தி பெரிய அளவில் வெற்றி பெற்றது.

- சுகிர், சுசீலா..பர்மா கவுண்டர் ஆத்மரிஷி போன்ற பாத்திரங்கள் வழியே தமிழக சாதிய கட்டமைப்பின் ஆணிவேர் மீது பயனிக்கும் விநோதமான கதை.

- ஒரு நூறாண்டு கால நிகழ்வுகளின் வாழ்வியல் தொகுதி...

- தமிழ் நாவலின் புதிய முகத்தை 1997ல் முன்மொழிந்த புறப்பாடு இது!

- திருப்பூர் கலை இலக்கிய பேரவை நடத்திய சுதந்திர பொன்விழா ஆண்டு நாவல் போட்டியில் - கையெழுத்து பிரதியிலேயே பங்கேற்று முதல் பரிசு பெற்ற நாவல் இரா.நடராசனின் பாலித்தீன் பைகள் - காவ்யா வெளியீடுAyeesha Ayeesha ஆயிஷா அன்றாட அறிவியல்