முதல்பக்கம் ஆசிரியர் பற்றி எழுத்தாளர் இன்று
  கதை / நாவல் சிருவர் இலக்கியம் மொழிபெயர்ப்பு 1 மொழிபெயர்ப்பு 2 அறிவியல் வரலாறு அறிவியல் புனைக்கதை  
 

ஆயிஷா அன்றாட அறிவியல்

Problem to View Tamil Fonts
Click here to
Download Tamil Font-Installer

   


Mail Your Response to the author
Any Comments?

 

வரலாறு மறந்த விஞ்ஞானிகள்

அறிவியலின் வரலாற்றில் தங்கள் பங்களிப்புகளுக்காக எந்த அங்கீகாரமும் கிடைக்காமல் போன... ஷீலே முதல் டைக்கோ ஃப்ராஹே வரை 12 விஞ்ஞானிகளின் வாழ்க்கை கதையை அறிமுகம் செய்துள்ளார் இரா. நடராசன்... பள்ளிக் குழந்தைகளுக்கான அறிவியல் இதழான துளிர் இதழில் ஒரு தொடராக வெளிவந்த வரலாறு மறந்த விஞ்ஞானிகள் பிறகு ஒரு நூலாக வெளிவந்து எட்டு பதிப்புகள் பெற்றது - ஸ்நேகா வெளியீடு.


ஜன்ஸ்டீன் முதல் ஹாக்கிங் வரை

இருபதாம் நூற்றாண்டு இயற்பியல், உலக சரித்திரத்தை புரட்டிப்போட்ட ஒற்றைப் புயல் அது, இணையதளம் முதம் நிலாப் பயணம் வரை.. மின் சாதனங்கள் முதல்... வானூர்தி வரை.. சார்பியல் முதல் அணு ஆயுதம் வரை. பலநூறு ஆண்டு முன்னேற்றத்தை ஒரே நூற்றாண்டு சாத்தியமாக்கிதென்றால் அதற்கு ஒரேகாரணி இருபதாம் நூற்றாண்டு இயற்பியல்தான்.. அதன் அத்தனை அம்சங்களையும் தனது மணிப்பிரவாக நடையில் பரபரப்போடு நகர்த்திச் செல்கிறார் இரா.நடராசன். பல ஆய்வு மாணவர்களுக்கு பயன்பட்டு வரும் ஒரு புதையல் இந்த நூல் - ஸ்நேகா வெளியீடு.


கணிதத்தின் கதை

கணிதம். கடவுளின் மொழி என்ற மர்ம உறுத்தல்களுடன் மனிதனின் ஒப்பற்ற அறிவாற்றல் கண்டுபிடிப்பாய் விளங்கும். கணிதத்தின் முழு வரலாற்றை கிரேக்கர், ஹிப்ரு, பாபிலோனியா முதல் இன்றைய கணித இயலுலகம் வரை கணிதம் குறித்த மொத்த வரலாற்றை சுவைபட தொகுத்திருக்கிறார் இரா.நடராசன். அல்ஜீப்ரா, கால்குலஸ் போன்றவைகளின் அன்றாடப் பயன்களையும் பட்டியலிட தவறவில்லை. கணிதத்தில் ஓரளவு விருப்பமுள்ள அனைவருக்குமாக அற்புத சுவை விருந்து இது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை - முதல் பரிசு பெற்றது. - ஸ்நேகா மூன்று பதிப்புகள் தற்போது புது பொலிவுடன் பாரதி புத்தகாலயம் மீண்டும் வெளியிட்டுள்ளது.


உலகத் தொழில்நுட்ப முன்னோடிகள்

இணையதளம், மின்னஞ்சல் முதல் செல்ஃபோன் வரை புதிய கண்டுபிடிப்புகள் வந்த கதையை சுவாரசியமாக எழுதுகிறார் இரா.நடராசன். நவீன தொழில்நுட்பத்தொடு இத்தொகுதியில் கருத்துக்கணிப்புகள் வந்த கதை முதல் அமெரித்தியா சென்னின் பொருளாதார பங்களிப்பு வரை பல இதர சுவையான அம்சங்களும் உண்டு - ஸ்நேகா வெளியீடு.


உலகப் பெண் விஞ்ஞானிகள்

45 உலக அளவிலான பெண் விஞ்ஞானிகள் அவர்களது அறிவியல் பங்களிப்பை விளக்கும் அபூர்வமான புத்தகம் இது. இதுவரை பெண் விஞ்ஞானிகளில் மேடம் கியூரி தவிர வேறு யாருமே கவனம் பெறவில்லை. தமிழ் வாசகர்களுக்கு உலக அரங்கில் இத்தனை பெண் விஞ்ஞானிகள் இருப்பதை முதன் முதன்முறையாக இரா.நடராசன் தனது எழுத்து நடையால் பிசிரின்றி விவரித்து செல்கிறார். அவரது கடுமையான நான்காண்டு கால தேடலில் கிடைத்த புதையல் இது - ஸ்நேகா வெளியீடு.


விஞ்ஞான விக்கரமாதித்தன் கதைகள் (மருத்துவத்துறை அற்புதங்கள்)

விக்கிரமன் - வேதாளம் உரையாடும் உத்தியில் குழந்தைகள் விரும்பும் விதமாக நீரிழிவு நோய், போலியோ காய்ச்சல், மலேரியா காய்ச்சல், புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் நோய் தீர்ப்பில் இதுவரை நடந்துள்ள மருத்துவத்துறை சாதனைகளை அறிவியல் பூர்வமாக விவரித்து செல்வதோடு நோயின் அறிகுறி செய்யவேண்டிய முதலுதவி... மருத்துவ உதவி என விவரிக்கும் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த நூல் - பாரதி புத்தகாலயம்.


Ayeesha Ayeesha ஆயிஷா அன்றாட அறிவியல்