முதல்பக்கம் ஆசிரியர் பற்றி எழுத்தாளர் இன்று
  கதை / நாவல் சிருவர் இலக்கியம் மொழிபெயர்ப்பு 1 மொழிபெயர்ப்பு 2 அறிவியல் வரலாறு அறிவியல் புனைக்கதை  
 

ஆயிஷா அன்றாட அறிவியல்

Problem to View Tamil Fonts
Click here to
Download Tamil Font-Installer

   


Mail Your Response to the author
Any Comments?

 

கதைஉரையாடல் - சுயசரிதை (FICTION / BIOGRAPHY)

கறுப்பு அடிமையின் சுயசரிதை - பெடரிக் டக்ளஸ்

- பெடரிக் டக்ளஸ் எனும் அமெரிக்க கருப்பு அடிமையின் சுயசரிதை (அவரே எழுதியது) எனும் கருப்பு அடிமை இலக்கிய்த்தின் மிக முக்கிய படைப்பு. 1860களில் அபாலினிஸ்ட் இயக்க தலைவர்களில் ஒருவரும் அமெரிக்க அடிமை முறை ஒழிப்பு இயக்க பேச்சாளருமானபெடரிக் டக்ளஸ் எழுதிய சுயவரலாறு. நிறப்பிரிகை - இதழுக்காக சில அத்தி யாயங்களை மொழிபெயர்த்த இரா. நடராசன்... பிறகு முழு நூலையும் மொழி பெயர்த்து முடித்தார்.

- நூலாக வெளிவந்ததும்... அதே நூலை வேறு ஒருவரும் தமிழில் மொழி பெயர்த்ததை அறிந்து அதிர்ச்சியுற்று நூலை திரும்பப் பெற அவர் முயன்றார். ஆனால் சரளமான நேர்த்தியான மொழி பெயர்ப்பாக இருந்ததால் வெளிவந்த சில நாட்களிலேயே அடுத்தடுத்து மூன்று பதிப்புகளை வெளியிட வேண்டி வந்ததோடு... ஸ்நேகா பதிப்பகத்தை அடுத்து பாரதி புத்தகாலயம் சுமார் பத்தாண்டுகள் கழித்து வாசகர்களின் வேண்டுகோளூக்கு இணங்க மறு பதிப்பாக மீண்டும் கொண்டு வந்தது.


பயாஃப்ராவை நோக்கி - நைஜீரிய நாவல் - புச்சி யாசெட்டா

- நைஜீரியாவின் கொடிய பயாஃப்ரா யுத்தத்தின் போது இக்போ இனக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமைக்காக போராடத் தொடங்கி - போராட்டம் தோல்வி அடைவதோடு வடக்கத்திய பெரும்பான்மை இனத்தால் முற்றிலும் அழிவுக்கு உட்படுத்தப்படுவதன் ரத்த சாட்சியம் இந்த நாவல்.

- புச்சி யாசெட்டா கருப்பின பெண் எழுத்தாளர். - Destination Biofra - நாவல் தமிழில் இரா. நடராசனின் மொழிப்பெயர்ப்பாக வெளிவந்த போது... பயாஃப்ரா யுத்தம் - ஈழ யுத்தத்தோடு ஒப்பீடு செய்யப்படுவதும் சர்வதேச ஆக்கிரமிப்பு அரசியலும் கலந்தாய்வு பெருவதுதவிர்க்க இயலாதானது. -ஸ்நேகா வெளியீடூ.


இடையில் ஓடும் நதி - கூ.கி.வா.திவாங்கோ

- கென்யாவின் கருப்பின எழுத்தாளர் கூ.கி.வா.திவாங்கோவின் இரண்டாவது நாவல். ஏற்கனவே (Weepnot child) மற்றும் (Devil on the Cross) ஆகியவை தமிழில் வந்திருந்த சூழலில் நாவலை இரா. நடராசன் மொழி பெயர்த்தார்.

- மூன்றாம் உலக நாடுகளின் குரலை புயலாய் அதிரவைத்த கூகியின் எழுத்துக்கள் வாசகனை காலனித் துவக்கத்திற்கு எதிராக பதற வைக்கும் யதார்த்தங்களோடு களமிறங்க வைத்துவிடும் தன்மை கொண்டது. கென்ய கிக்குயு மொழியில் எழுதப்பட்ட இது பின் கூகியாலேயே ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பானது.

- இந்த நாவலில் வரும் நாயகன் வாய்யாகி ஒரு ஆசிரியன்... உண்னை ஆசிரியன்... அவனுக்கும் அவனது சமூகத்திற்கான முரண்.

ஒருவருக்கு எதிராய ஒருவரை நிறுத்தி பகடை ஆடுகிறது. அந்த ஒன்றிற்காக இதை மொழி பெயர்த்தேன் என்று திருப்பூர் தமிழ் சங்கம் சிற்ந்த மொழி பெயர்பாளர் விருது வழங்கிய போது இரா. நடராசன் குறிப்பிட்டார் - ஸ்நேகா பதிப்பகம்.


Ayeesha Ayeesha ஆயிஷா அன்றாட அறிவியல்