முதல்பக்கம் ஆசிரியர் பற்றி எழுத்தாளர் இன்று
  கதை / நாவல் சிருவர் இலக்கியம் மொழிபெயர்ப்பு 1 மொழிபெயர்ப்பு 2 அறிவியல் வரலாறு அறிவியல் புனைக்கதை  
 

ஆயிஷா அன்றாட அறிவியல்

Problem to View Tamil Fonts
Click here to
Download Tamil Font-Installer

   


Mail Your Response to the author
Any Comments?

 

மற்றவை (NON-FICTION)

அறிவியல் - வளர்ச்சி மற்றும் வன்முறை - கிளட் ஆல்வாரஸ்

அழிவுக்கு பெயர் வளர்ச்சி. சொந்த மண்ணின் அடையாள சிதைவுக்கு பெயர் நாகரீகம். நவீன அறிவியல் - வளர்ச்சி என்பது அழிவுதான் என்பதை நிரூபித்த புத்தகம். சுற்று சூழல் பேராளி மாற்று சிந்தனையாளர் கிளாட் ஆல்வாரஸின் பிரதான நூலான இதை இரா. நாடராசன் விழுதுகளுக்காக மொழி பெயர்த்தார். விழுதுகள் ராகவன் (தோழர் ராயன்) திடீர் மரணம் காரணமாக வெளியீடு தள்ளிப் போனது. இந்திய அரசின் பசுமை புரட்சி முதல் அணுசோதனை வரை அனைத்தின் மறுபக்கத்தையும் அம்பலப்படுத்தும் - அறிவியல் விமர்சன நூல் இது.


இந்திய பொருளாதாரத்தின் உண்மை நிலை - பகுதி 1

கல்கத்தாவின் பொருளாதார விமர்சனக்குழுமம் வெளியிட்ட முக்கிய வெளியீடு ஒன்றின் தமிழாக்கம். தமிழில் பொருளாதாரம் குறித்த நூல்கள் மிகவும் அரிதாகவே வெளிவருகின்றன என்பதை கருத்தில் கொண்டால் விழுதுகளின் இம்முயற்சி எத்தகைய கடினங்களை உள்ளடக்கியது என்பது புரியும். உலகமயமாதலிலிருந்து சர்வதேச சந்தையில் இந்தியாவின் அவலம் உரை - பொருளாதார சரிவின் காரண காரியங்களை ஆதாரத்துடன் வெளியிட்ட பொருளாதார விமர்சகர்கள் அவசியம் - வாசிக்க வேண்டிய புத்தகம். இதனை எளிய தமிழில் மொழி பெயர்த்து சாதாரண மக்களின் வாசிப்பிற்கு ஏற்றார்போல தந்திருக்கிறார் இரா. நடராசன். விழுதுகள் வெளியீடு. இதன் இரண்டாம் பகுதியை மொழி பெயர்பாளர் லதா ராமகிருஷ்ணன் தமிழில் எழுத அதுவும் வெளிவந்தது.


சுறாவளியும் அடிபணியும் கியூபா (பேரிடர் மேலாண்மை)

மிச்சேல் சூறாவளி தாக்கிய போது கரீபிய கடலில் வடஅமெரிக்கா உட்பட பல நாடுகளில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்த போது அது மையம் கொண்டு வீசிய - தாக்கிய கியூபாவிலோ உயிரிழப்பு ஏதுமில்லை. காரணம் கியூபாவின் விஞ்ஞானப் பூர்வமான பேரிடர் மேலாண்மை. ஃபிடல் காஸ்ட்ரோவின் 80வது பிறந்த தினசிறப்பு வெளியீடாக என்.சி.பி.எஸ். வெளியிட்ட முக்கிய ஆவணம் இரா. நடராசனின் அறிவியல் தமிழில் - பேரிடர் மேலாண்மைக்கு முக்கிய பாடப்புத்தகம் இது - என்.சி.பி.எஸ். வெளியீடு.


ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான கல்விமுறை - பாவ்லோ ஃப்ரையிரே

கல்விக் கோட்பாட்டியலில் தனக்கென்று ஒரு இடம் - தடம் பதித்தவர் பாவ்லோ ஃப்ரையிரே. இவர் போர்ச்சுகீசிய மொழியில் எழுதிய நூலை வாசித்து கல்விமுறை மாற்றங்களை தமிழ் சூழலில் முன்மொழிந்தவர் பலர் ஆனால் நாற்பத்தைந்து ஆண்டுகளாக தமிழில் நூலை கொண்டு வரும் முயற்சிகள் பல தோல்வியே அடைந்தன. போர்ச்சுகீசிய மொழியிலிருந்து ஸ்பானிய மொழிக்கும் அதிலிருந்து ஆங்கில மொழிக்கும் சென்ற இந்த அபூர்வ கல்வி கோட்பாட்டு நூலை இரா. நடராசன் தமிழில் மொழி பெயர்த்தார். புத்தக்ங்களுடன் புத்தாண்டு என இந்திய மாணவர் சங்கம் வெளியிட்ட மாற்று கல்வி குறித்த 25 நூல்களில் ஒன்றாக இந்த அரிய நூல் வெளிவந்தது. - பாரதி புத்தகாலயம் வெளியீடு.


Ayeesha Ayeesha ஆயிஷா அன்றாட அறிவியல்