முதல்பக்கம் ஆசிரியர் பற்றி எழுத்தாளர் இன்று
  கதை / நாவல் சிருவர் இலக்கியம் மொழிபெயர்ப்பு 1 மொழிபெயர்ப்பு 2 அறிவியல் வரலாறு அறிவியல் புனைக்கதை  
 

ஆயிஷா அன்றாட அறிவியல்

Problem to View Tamil Fonts
Click here to
Download Tamil Font-Installer

   


Mail Your Response to the author
Any Comments?

 

பீனிக்ஸ் - உலக தரம் வாய்ந்த அறிவியல் நாடகங்கள்

இன்று அறிவியல் என்பது பள்ளிக்கூட, கல்லூரி ஆய்வகங்களில் பாடமாக இருப்பது மட்டுமே அல்ல. இன்றைய அறிவியல் உலக அரசியலின் அதிகாரம். புவியின் பாதுகாப்பு என்பனவற்றையும் உள்ளடக்கியது. சிந்தி மொழியில் மேக்ராஜ் குர்நானி எழுதிய ஒரு சில அறிகுறிகள். குஜராத்தி மொழியில் ஹாஸ்முக் பராடி எழுதி இயக்கிய ஜனார்த்தன் ஜோசப், வங்காளமொழி நாடகமான ஃபீனிக்ஸ் ஆகிய மூன்று அறிவியல் நாடகங்களை உள்ளடக்கிய தமிழின் முதல் பிறமொழி அறிவியல் நாடக தொகுதி - ஸ்நேகா வெளியீடு - இரா. நடராசனின் தமிழில் ஃபீனிக்ஸ் திண்டுக்கல்லில் மேடை நாடகமாக அரங்கேற்றப்பட்டது.


கலீலியோ - நாடகம்

உலகின் மாபெரும் சிந்தனையாளரும் விஞ்ஞானியும் தூய இயற்பியலின் தந்தையுமாகிய கலீலியோ, கலீலியின் வாழ்க்கை சம்பவங்களை பள்ளி மாணவர்கள் எளிதில் மேடையேற்றும்படியாக ஒரு நாடகமாய் இரா. நடராசன் எழுதியுள்ளார். கலீலியோவின் விஞ்ஞான சாகச வாழ்வியல் பயணத்தை எளிதாக புரிந்து கொள்ள ஒரு வழி - பாரதி புத்தகாலயம்.


சார்லஸ் டார்வின் - நாடகம்

பரிணாம இயல் தத்துவம் மூலம் தனது மாபெரும் பங்களிப்பை, நல்கிய பத்தொன்பதாம் நூற்றாண்டின் பேரறிஞர் டார்வினின் வாழ்வு. அத்தோடு மனித குரங்கு மனிதனாக மாறிய இடைநிலை படிகளை - உயிரியலின் ஆரம்ப நிலை மாணவர்க்கும் புரியும்வண்ணம் வடிக்கப்பட்டுள்ள யுத்தி கொண்ட எளிய நாடகம். ஏற்கனவே சிதம்பரத்தில் மேடையேற்றப்பட்டுள்ளது - பாரதி புத்தகாலயம்.


கேள்வியின் நாயகன்

தமிழில் அபூர்வமாய் எழுதப்பட்டுள்ள எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடகம். ஒரு திரைக்கதை போல எழுதப்பட்டுள்ள இது எய்ட்ஸ் விழிப்புண்ர்வு கருத்தரங்கில் பங்கேற்கும் ஒரு சிறுவனும் அவரது பெற்றோர்களும் பெரும் அனுபவங்களையும் அவனது தாய் தன் வாழ்வின் ஏற்கனவே அனுபவித்த வலியின் அடையாள சின்னம் ஒன்றை அங்கே நேரடியாக மேடையில் சந்திக்கும் மர்மமுடிச்சின் வழியே நடத்திச் செல்லப்படும் எளிய நாடகம் - ஸ்நேகா வெளியீடு.


Ayeesha Ayeesha ஆயிஷா அன்றாட அறிவியல்