முதல்பக்கம் ஆசிரியர் பற்றி எழுத்தாளர் இன்று
  கதை / நாவல் சிருவர் இலக்கியம் மொழிபெயர்ப்பு 1 மொழிபெயர்ப்பு 2 அறிவியல் வரலாறு அறிவியல் புனைக்கதை  
 

ஆயிஷா அன்றாட அறிவியல்

Problem to View Tamil Fonts
Click here to
Download Tamil Font-Installer

   


Mail Your Response to the author
Any Comments?

 

'ஆயிஷா'

கல்வி - வாழ்க்கை - அறிவியல் புனைக்கதை

தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல் தான் இது.

பள்ளிக்கூடங்கள், பலிக்கூடங்கள் ஆகிவிட்டன அல்லவா... இந்த யதார்த்தத்தை போட்டுஉடைத்து தமிழ் சூழலில் மட்டுமின்றி (8 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு) உலகெங்கும் கல்வி ஆர்வலர்களின் மனசாட்சியை புரட்டிப்போட்ட ஒரு இயக்கம் இந்த படைப்பு.

இன்றும் லட்சக்கானவர்களை கல்வி குற்த்த விமர்சனப் பார்வைக்குள் இழுக்கும் சக்திவாய்ந்த படைப்பு, இரா. நடராசனை, 'ஆயிஷா நடராசன்' என்றே அறிய வைத்த கதை.

- கணையாழி வழி - ஜெராக்ஸ் எடுத்து பல நூறுபேர் பல ஆயிரம் பேருக்கு வாசிக்க அன்போடு முன்மொழிந்தார்கள்.

- ஸ்நேகா பதிப்பகம் இரண்டு ரூபாய்க்கு ஒரு சிறு தனி நூலாகக் கொண்டு வர ஒரே வருடத்தில் ஒன்பது பதிப்புகள் கண்டது.

- நிகர் முதல் வாசல் வரை - 17 அமைப்புகள் ஆயிஷா கதையை தனிநூலாக்கி பரவலாக எடுத்துச் சென்றன.

- அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகளின் போது ஆயிஷா கட்டாய பாடமாக்கப்பட்டது.

- அதைத் தவிர ஏழு தன்னதிகார கல்லூரிகள், மூன்று பல்கலைகழகங்கள் ஆயிஷாவை பாடமாக வைத்துள்ளன.

- ஆயிஷா மன்றங்கள் என்று மதுரை மற்றும் கோவையில் கிராமப்புற குழந்தைகளால் தொடங்கப்பட்டு அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.


ரோஸ்

பள்ளிகளில் மட்டுமல்ல - வீட்டிலும், பள்ளியிலுமாக குழந்தைகள் அன்றாட வாழ்வின் பல்சக்கரங்களில் வதைபடுவதை உரையாடலாக விவரிக்கும் அற்புத நாவல் - இரண்டாம் பதிப்பு - பாரதி புத்தகாலயம், சென்னை.


நாகா - சிறுவர் நாவல்

சுனாமியை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுவர் நாவல். சாரண இயக்கத்தின் நூற்றாண்டை கொண்டாடிய நாவல். நாகா தனது சாரண சகாக்களோடு கடலில் நீந்த சென்று நேரடியாக சுனாமிப் பேரலைகளில் சிக்குகிறான்...தப்புகிறானா...சாரண அமைப்பின் அடிப்படை அம்சங்களோடு கடலூரின் வரலாறை பின்னிபிணைந்து வழங்கப்படும் அசத்தலான விருந்து...மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நூல். - பாரதி புத்தகலாயம், சென்னை.


மலர் அல்ஜீப்ரா - நாவல்

தனது கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெறும் கணித மேதை, அது தனது கண்டுபிடிப்பு அல்ல எனும் உண்மையை நோபல் பரிசு ஏற்புரையில் போட்டு உடைக்கும் யுத்தி.
குழந்தைகளுக்கு தமிழ் கணிதத்தை எளிமையாகவும், மிகவும் சுவாரசியமாகவும் எடுத்துச் சென்ற்து. தமிழ் சூழலில் ஹாரி போட்டரை விட அதிகம் குழந்தைகளிடையே விற்பனையான புத்தகம், த.மு.எ.ச. (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்) சிறந்த சிறுவர் நூலுக்கான விருது பெற்றது.-பாரதி புத்தகலாயம், சென்னை.


ஒரு தோழனும் மூன்று நண்பர்களும் - நாவல்

தில்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் குழந்தைத் தொழிலாளியாய் ஹோட்டல் சிப்பந்திகளிடம் விடப்பட்ட தோழரு...செஸ் விளையாட்டை விளையட கற்று மிக்ப்பெரிய சாம்பியனாக உருவெடுக்கும் ஆச்சரியமான கதை. செஸ் விளையாட்டின் உலகை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாவருக்கும் சுவைபட முன்வைக்கும் வித்தியாசமான நாவல்... - வம்சிபுக்ஸ், திருவண்ணாமலை.


நீ எறும்புகளை நேசிக்கிறாயா - பன்மொழி சிறுவர் கதைகள்

சத்யஜித்ரே முதல் ஒன்பது உலகளாவிய சிறுவர் இலக்கிய கர்த்தாக்களை தமிழில் அறிமுகம் செய்த அபூர்வமான முயற்சி. இத்தொகுப்பில் இடம் பெற்ற ரஷ்ய மற்றும் சீனக்கதைகள் நிறைய குழந்தைகளை வாசிக்க. -பாரதி புத்தகலாயம், சென்னை.


ஒரு படை வீரரின் மகன்

ஜப்பான், சீனம், இந்தோனேஷியா, பாலஸ்தீனம் என தொகுக்கப்பட்ட வித்தியாசமான சிறுவர் கதைகள் கொண்ட மற்றுமொரு தொகுதி... இரா. நடராசனின் எளிய மொழி பெயர்ப்பு - வம்சிபுக்ஸ், திருவண்ணாமலை.


பூஜ்யமாம் ஆண்டு

தமிழின் முதல் பிரைல் மொழி நாவல். 'பூஜ்யமாம் ஆண்டு' ஒரு சிறுவர் நாவல். அறிவியல் புனைக்கதையாக எழுதப்பட்டுள்ள இது, இதுவரை வெளிவந்துள்ள உலகலாவிய சிறுவர் நாவல்களில் சிறந்தது மட்டுமல்ல வித்தியாசமானதும்கூட. -பாரதி புத்தகலாயம், சென்னை. (விரிவு)


கவிதை

இரா. நடராசனின் முதல் கவிதை தொகுதி...

- கருவறை முதல் கல்லறை வரை எனும் தனிக்கவிதை பகுதியும் ஒற்றை வரிக் கவிதைகளையும் உள்ளடக்கியது. 1982ல் வெளி வந்தது. தற்போது அச்சில் இல்லை.

- ஆனந்த விகடனில் 1976ல் பிரசுரமான இரா. நடராசனின் முதல் கவிதை படைப்பு இத்தொகுதியில் காணக்கிடைக்கிறது.


கறுப்பு யுத்தம் கவிதைகள்...

தமிழில் வெளிவந்த ஆண்டுகளில் (1990) பெரிதும் பேசப்பட்ட வித்தியாசமான கவிதை தொகுதி. நெல்சன் மாண்டேலா... பஞ்சமின் மொலாயாஸ் போன்ற கவிதைகள் மிகவும் பிரபலம். பஞ்சமின் மொலாயாஸ் பற்றி கவஞர் இரா. நடராசன் எழுதிய - நீ புதைக்கப்பட - வில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய் - எனும் வரியை எடுத்து பல போராட்ட அமைப்புகள் பயன்படுத்தின, பயன்படுத்தி வருகின்றன. பெங்களூர் தமிழ் சங்கத்தில் இத் தொகுதியை வெளியிட்டு எழுத்தாளர் சுஜாதா நீண்ட விமர்சன உரை ஆற்றினார். இந்த கவிதை தொகுதிக்கு கவிஞர் இங்குலாப் முன்னுரை எழுதியிருந்தார். -காவ்யா வெளியீடு.


தொலைப்புச் செய்திகள்...

புதுவீச்சில் படைக்கப்பட்ட அற்புதமான காவியம் இந்த தொலைப்பு செய்திகள். தொழிற்சங்க அரசியல் நீர்த்துப்போய் சாதிய அரசியல் கோலொச்சுவதை - விவசாய கிராமம் அழிக்கப்பட்டு தொழிற்பேட்டை அமைக்கப்படும் சுற்றுச் சூழல் அவலத்தை, கலாச்சார சீர்கேட்டை என பல்விதமான நவீன சீரழிவுகளை சிங்காரம்...மாத்யூ...பாத்திரங்கள் மூலம்... ஒரு ரயில் பயண கதை நகர்வில் கவித்துவமாய் முன் வைக்கும் நவீன காவியம் இது...தொலைப்பு செய்திகள் வாசித்தீர்களா...நெக்குருக வைத்துவிடும். - ஞானக்கூத்தன் (சுபமங்களா - நேர்காணல்) - இரண்டாம் பதிப்பு, ஸ்நேகா, சென்னை.



Ayeesha Ayeesha ஆயிஷா அன்றாட அறிவியல்